லஞ்சம்

ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் மீது அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
வேலூர்: சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக ஊராட்சி மன்றச் செயலாளர், அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி: திருச்சி முன்னாள் சார்-பதிவாளர் ஜானகிராமன் (79), அவரது மனைவி வசந்தி (65) ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 1989 முதல் 1993 வரை சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார் ஜானகிராமன். ஜானகிராமன் பணியாற்றிய காலத்தில் தனது பெயரிலும் மனைவி வசந்தி பெயரிலும் ரூ.32.25 லட்சத்தில் சொத்து வாங்கியுள்ளார்.
மதுரை: தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம், பரிசு என ஏதேனும் ஒருவகையில் லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.