அமெரிக்கா

பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங், புதன்கிழமை (மார்ச் 27) அமெரிக்க அதிகாரிகளையும் கல்விமான்களையும் பெய்­ஜிங்­கில் உள்ள மக்­கள் மாமண்­ட­பத்­தில் சந்தித்ததாக சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: காஸா போர் காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பால்டிமோர், மேரிலேண்ட்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ‘ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் பாலத்தின் மீது கப்பல் மோதியதை அடுத்து, அப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்ததாக அந்நாட்டு ஊடகம் மார்ச் 26ல் தெரிவித்தது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் 14 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலில் ஏராளமானவர்கள் தானியங்கி ஆயுதங்களால் சுடப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 24) அந்நாடு துக்கம் காத்தது. தேசியக் கொடிகள் அரை கம்பத்துக்கு இறக்கப்பட்டன.

தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிப்பதாக சூளுரைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.

“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மார்ச் 23ஆம் தேதி, மக்களுக்கு ஆற்றிய உரையில் திரு புட்டின் வருத்தம் தெரிவித்தார்.