சிங்கப்பூர் பயணிகள் இருவரிடம் செல்லுபடியாகாத ஆர்டி-பிசிஆர் சான்றிதழ்: விமான நிறுவனங்களுக்கு திருச்சி விமான நிலையம் எச்சரிக்கை

சிங்கப்பூர்- திருச்சி வழித்தடத்தில் சேவை வழங்கும் விமான நிறுவனங்களுக்கு திருச்சி அனைத்துலக விமான நிலையம் கடும் எச்சரிக்கையைப் பிறப்பித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி  சென்ற பயணிகளில் இரண்டு பேர் செல்லுபடியாகாத ஆர்டி- பிசிஆர் கொரோனா சான்றிதழை அதிகாரிகளிடம் தாக்கல் செய்ததை அடுத்து அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  கூறியது. 

“அந்த இருவரில் ஒருவர் பழைய சான்றிதழுடன் வந்தார். மற்றொருவர் பல குறைபாடுகளுடன் கூடிய செல்லுபடியாகாத சான்றிதழை எடுத்துவந்தார். 

“இருவரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த இருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் செல்லும் நகர்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“அந்த இருவரிடம் தொற்று அறிகுறி தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தைக் கடுமையான  ஒன்றாகக் கருதுகிறோம். 

“பயணிகள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைக் காட்டும் செல்லுபடியாகக்கூடிய ஆர்டி-பிசிஆர் சான்றிதழுடன் வருகிறார்கள் என்பதை திருச்சி-சிங்கப்பூர் வழித்தடத்தில் சேவையாற்றும் விமான நிறுவனங்கள் (இண்டிகோ, ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்) உறுதிப்படுத்த வேண்டும்,” என்று திருச்சி விமான நிலைய மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனிடையே, தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் உருமாறிய பிஎஃப்-7 என்ற ஓமிக்ரான் கிருமித்தொற்று இல்லை என்று அந்த மாநில சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!