டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப் படை வீரர்கள் இறுதி மரியாதை

1 mins read
fdd55c01-2481-4b47-8170-7d7da306ecc0
டெல்லி கணேஷ் உடல் மீது விமானப் படையின் கொடியைப் போர்த்தி வீரர்கள் இறுதி மரியாதை அளித்தனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடலுக்கு இந்திய விமானப் படை வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.

சென்னை ராமபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

திங்கட்கிழமை (நவம்பர் 11) டெல்லி கணேஷின் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக, காலை 10 மணியளவில் விமானப் படை சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரது உடல்மீது விமானப் படையின் கொடியைப் போர்த்தி வீரர்கள் இறுதி மரியாதை அளித்தனர்.

நடிப்பதற்கு முன்னதாக 1964 முதல் 1974 வரை 10 ஆண்டு காலம் இந்திய விமானப் படையின் வீரராக டெல்லி கணேஷ் பணியாற்றினார்.

போர்க்காலங்களில் அடிபடும் வீரர்களை மகிழ்விக்கும் விதமாக சகவீரர்களுடன் சேர்ந்து நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய டெல்லி கணேஷ், பின்னாளில் திரையுலக நடிப்புக்காக விமானப் படை வேலையில் இருந்து விலகினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்