‘என் தந்தை ஒரு போராளி’: அஜித் சகோதரர் உருக்கம்

தம் தந்தை ஒரு போராளி என்று நடிகர் அஜித் குமாரின் சகோதரர் அனில் குமார் உருக்கமாகக் கூறியுள்ளார்.

நடிகர் அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணியம், 86, உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 24) சென்னையில் காலமானார்.

இதையடுத்து அண்மையில் யூடியூப் ஒளிவழி ஒன்றுக்கு அனில் அளித்த பேட்டியில், “எங்களுடைய அப்பாவுக்கு உண்மையில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். அவர் எங்களை கண்டிப்புடன் வளர்க்கவில்லை. எங்களுக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுத்தார். அவர் உண்மையில் ஒரு போராளி. 

“படிப்பில் அவருக்குப் பெரிதாக நாட்டம் இல்லை. ஆனால் அவர் மிகவும் புத்திசாலி. 65 வயதிலும் அவர் இணையத்தை மிகவும் நன்றாக பயன்படுத்தும் அளவிற்கு தன்னை தகவமைத்துக்கொண்டார். 

“புது தொழில்நுட்பங்களையும் அவர் தெரிந்துகொண்டார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, பட்டக்கல்விச் சான்றிதழ் பெறவில்லை என்றாலும் அப்பா புத்திசாலி என்று. அவர் எங்களைப் பொறுப்போடு நடக்க வைத்தார்,” என்று அனில் பேசினார்.

“அப்பாவும் அம்மாவும் வெவ்வேறு கலாசார பின்புலத்தைச் சேர்ந்தவர்கள். அப்பா தமிழ், கேரளாவில் வளர்ந்தார். அம்மா சிந்தி, கராச்சியைச் சேர்ந்தவர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு வந்துவிட்டார். 

“நாங்கள் பதின்ம வயதினராக இருந்தபோது, புகைபிடிக்க வேண்டும் என்றாலோ, மது அருந்த வேண்டும் என்றாலோ அவர்கள் கண் முன்னால் செய்யுமாறு எங்கள் வீட்டில் சொல்வார்கள். வேற யாராவது உங்கள் மகன்கள் இப்படி செய்கிறார்கள் எனச் சொல்லும்போது அவர்களுக்குக் கேட்க சிரமமாக இருக்கும், என்றும் அனில் பகிர்ந்தார்.

அஜித் குமாரின் தாய், தந்தை. அஜித்தின் தந்தை ஒரு தமிழர், கேரளாவில் வளர்ந்தார். அம்மா சிந்தி, கராச்சியைச் சேர்ந்தவர். படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!