சென்னை: மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளார். துணைத் தலைவராக ஜெயரஞ்சன் மற்றும் இதர உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திட்டக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் அமைச்சர் என்ற முறையில் உதயநிதி அலுவல்சாரா துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துணைத் தலைவராக இருந்த ஜெயரஞ்சன் செயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர, தமிழகத் தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அலுவல்சாரா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இரு முழு நேர உறுப்பினர்களும் ஏழு பகுதி நேர உறுப்பினர்களும் உள்ளனர்.

