திருவண்ணாமலை கோவிலில் வெளிநாட்டு சிவபக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை

திருவண்ணாமலை கோவிலில் வெளிநாட்டு சிவபக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை

1 mins read
4a7ce44e-a4c8-418e-af9a-42273ad5c141
போர்ச்சுகல்லைச் சேர்ந்த பக்தர்கள் வட்டவடிவில் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வெளிநாட்டினர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூரில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

அவ்வப்போது வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர்.

இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் ஒன்றிணைந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்து வணங்கினர்.

நவகோபுரங்களை தரிசனம் செய்த அவர்கள், மகிழ மரம் அருகே வட்ட வடிவில் அமர்ந்து அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

மேலும் அவர்கள் கல்தூண்களில் செதுக்கப்பட்டு இருந்த சிற்பங்களை வியப்புடன் பார்வையிட்டனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி மாடவீதிகளில் காலை மற்றும் இரவில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான டிசம்பர் 3ஆம் தேதி காலையில் பரணி தீபமும் மாலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்