புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் சாலைக் காட்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், டிசம்பர் 5 ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்துவதற்கு மட்டும் அம்மாநிலக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கரூரில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
அச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்புக் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
மக்கள் சந்திப்பின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையையும் உருவாக்கினார்.
இதைத்தொடர்ந்து, விஜய் தனது பிரசாரத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது.
அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் சாலைக் காட்சி நடத்த விஜய் திட்டமிட்டார். நவம்பர் 26ஆம் தேதி அதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த மனுவைப் பரிசீலித்த காவல்துறைச் சாலைக் காட்சிக்கு அனுமதி மறுத்ததோடு பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.

