வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தனியார் பள்ளிக்கு விடுமுறை

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தனியார் பள்ளிக்கு விடுமுறை

1 mins read
62400421-9131-48f3-83f3-9ca24d76bbeb
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. - படங்கள்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

திருச்சி: திருச்சியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். அதோடு, முன்னெச்சரிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருச்சி - திண்டுக்கல் சாலையில் கள்ளிக்குடி அருகே இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 1,200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். ஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில், பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் லேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.

இதனையடுத்து அவர் இது குறித்து ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலையடுத்து பள்ளிக்கு சென்ற ராம்ஜி நகர் காவல்துறையினர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த மின்னஞ்சல் யார் அனுப்பியது, எதற்காக அவ்வாறு அனுப்பினார்கள் என்பது குறித்து ராம்ஜி நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வட்டார போக்குவரத்து அதிகாரி தட்சிணாமூர்த்தி பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரின் உத்தரவுப்படி பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
வெடிகுண்டுபோக்குவரத்துமின்னஞ்சல்