மதுரை: ஐந்து அடுக்கு போலிஸ் பாதுகாப்பு

மதுரை: இன்று மதுரையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அங்கு அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 1,264 கோடி ரூபாய் செலவில் இந்த மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது. 
இதன் மூலம் லட்சக்கணக் கானோர் பலனடைவர் என்று பலரும் குறிப்பிடும் நிலையில், பிரதமரின் வருகையை ஒட்டி மதுரை மாநகர் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருந் தது. பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் இதை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரதமர் மோடி, அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார். 
இதையடுத்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத் துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த மருத்துவமனையில் 750 படுக்கை கள் இருக்கும். மேலும் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான 100 கல்வி இடங்கள் தமிழகத்துக்குக் கிடைக்கும்.

Loading...
Load next