தலைக்கவசத்துடன் போலிஸ் மாயம்

சென்னை: இரவலாகக் கொடுத்த தலைக்கவசத்தை திருப்பிக் கொடுக்காமல் போலிசாரே எடுத்துச் சென்றது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நேற்று முன்தினம் திருவெறும்பூர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவும், இருசக்கர பேரணியும் நடைபெற்றது. இதில் அந்நிறுவன ஊழியர்களும் காவல்துறையினரும் மட்டும் பங்கேற்றனர். இந்நிலையில் பேரணியில் பங்கேற்க வந்த 8 காவலர்களிடம் தலைக்கவசம் இல்லை. இதையடுத்து அந்நிறுவனம் அவர்களுக்கு தலைக்கவசங்களை இரவலாகத் தந்தது. ஆனால் பேரணி முடிந்த பின்னர் 8 காவலர்களும் தலைக்கவசத்தைத் திருப்பிக் கொடுக்காமல் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஒலிப்பெருக்கியில் பலமுறை அறிவித்தும், 8 பேரும் கண்டுகொள்ளவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.4,800 என்றும், தன் சம்பளத்தில் அத்தொகை வெட்டப்படும் என்றும் தனியார் நிறுவன ஊழியர் வேதனையுடன் குறிப்பிட்டதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்