கோயிலில் கூடி லஞ்சம் வசூல்: அதிகாரிகள் வசமாக சிக்கினர்

திண்டுக்கல்: கோயிலில் கூட்டம் நடத்தி ரேஷன் கடை ஊழியர்களி டம் லஞ்சம் வசூலித்த மூன்று அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு போலி சார் மேற்கொண்ட  அதிரடி சோத னையில் பிடிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரில் மார்க்கெட் ரோட்டில் அகோபில நரசிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது.
அங்கு ரேஷன் கடை விற் பனையாளர்கள் மாதாமாதம் கூடு வர். வேடசந்தூர் தாலுகாவில் உள்ள 96 ரேஷன் கடைகளில் இருந்து 84 விற்பனையாளர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள் வது வழக்கம். 
கூட்டத்திற்கு வரும் பெரிய அதிகாரிகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் பங்கைச் செலுத்திவிடவேண்டும் என்பது நிபந்தனை.

வேடசந்தூர் வட்ட வழங்கல் அதிகாரி நாச்சிமுத்து, கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி ராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்மோகன் ஆகியோர் ஒவ்வொரு ரேஷன் கடை விற்பனையாளரிடம் இருந் தும் லஞ்சப் பணம் வாங்குவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலி சாருக்கு தகவல் கிடைத்தது.
லஞ்ச ஒழிப்புப் போலிசார் வியா ழக்கிழமை கோயிலுக்குள் புகுந்து, கோயிலின் கதவைப் பூட்டிவிட்டு சோதனை நடத்தி 90,250 ரூபாய் பணத்தைக்  கைப்பற்றினர். 
இது தொடர்பாக அந்த மூன்று அதிகாரிகளிடம் அவர்கள் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கோயிலில் நடந்த ரேஷன் கடை விற்பனையாளர்களின் கூட் டத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார்  நடத்திய சோதனை வேடசந்தூர் பகுதியில் ஒரே பேச்சாக உள்ளது.   
இதனிடையே, எட்டு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய திடீர் சோதனை களில் 14 லட்சம் ரூபாய் பிடிபட்ட தாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம் 

சிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

சிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு