ஜல்லிக்கட்டு: வீரர், காளைகள் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மணிகண்டன், 22, என்ற மாடுபிடி வீரர் பரிதாபமாக இறந்தார். 18 பேர் காயம் அடைந்தனர். மேலும், ரயிலில் அடிபட்டு இரண்டு காளைகள் உயிரிழந்தன. 
ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி வேளாங்கண்ணி என்பவர் இரண்டு காளைகளைக் கொண்டுவந்தார். அந்தக் காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் எல்லைக்கோட்டை கடந்து ஓடி கல்லக்குடியை அடுத்த பளிங்கானத்தம் ரயில்வே பாலம் அருகே தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது சரக்கு ரயிலில் அடிபட்டு மாண்டன.