சிறு துளி பெரு வெள்ளம்: தினகரன் அரசியல் வியூகம்

சென்னை:  அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகத்தை வகுத்து வருவதாகத் தெரிகிறது. 
சிறுதுளி பெருவெள்ளம் என்ற கணக்கில் அவர் காய்களை நகர்த்தி வருகிறார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார் கள். இந்த வியூகத்தையொட்டி அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் சேர்த்துக்கொள்ளப்படாத சிறுசிறு கட்சிகளுடன் தினகரன் பேச்சு நடத்திவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத்குமார் கட்சி, வேல்முருகன் கட்சி போன்றவற்றுடன் தினகரன் பேச்சு நடத்தி வருகிறார். இந்த நிலையில், அமமுகவுக்குப் பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தர முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது. 
இந்திய தேசிய லீக் தலைவர் முகம்மது சுலைமானும் அந்தக் கட்சியின் நிர்வாகிகளும் தினகர னுடன் பேச்சு நடத்தி உள்ளனர். 
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கி இருக்கும் நடிகர் கமல்ஹாசன், தனி அணியை உருவாக்க காய் களை நகர்த்தி வருவதாகவும் அவர் இந்த முயற்சியில் தினகரனுக் குப் போட்டியாகத் திகழக்கூடும் என்றும் கவனிப்பாளர்கள் கூறு கிறார்கள். 
தமிழ்நாட்டில் 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி களுக்கு மாற்றாக தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள், தமாகா போன்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டிபோட்டு கடைசி யில் காணாமல்போய்விட்டன. 
என்றாலும் இப்போது தின கரன் அமைக்கும் கூட்டணி அப்படி ஆகிவிடாது என்று அவரின் ஆதரவாளர்கள் உறுதியுடன் தெரிவித்து வரு கிறார்கள். தேர்தல் களத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பது தினகரனுக்கு அத்துப்படி என்றும் வெற்றிதான் அவரின் குறிக்கோளாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 
தினகரன் செல்லும் இட மெல்லாம் பெரும் கூட்டம் கூடுவதை அவர்கள்  சுட்டிக்காட்டுகிறார்கள்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம்