தாயும் மகளும் ஒரே நேரத்தில் தேர்ச்சி, ஒரே நேரத்தில் வேலை

தேனி: தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சாந்திலட் சுமி, 48, தன்னுடைய மூன்று மகள்களில்  மூத்தவரான தேன் மொழி, 27, என்பவருடன் சேர்ந்து 2018ல் தமிழக அரசு தேர்வாணைக் குழு நடத்திய தரநிலை (குரூப்) -4 தேர்வை ஒரே நேரத்தில் எழுதி இருவரும் தேர்ச்சி பெற்றனர். 
தொடர்ந்து அவர்கள் இருவருக் கும் இப்போது அரசு வேலையும் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளது. 
இதுபற்றி கருத்து தெரி வித்த சாந்திலட்சுமி, தனக்குப் பொது சுகாதாரத் துறையிலும் மகளுக்கு இந்துசமய அற நிலையத் துறையிலும் இள நிலை உதவியாளர் பணி கிடைத்துள்ளதாகவும் கூறி னார்.
சாந்திலட்சுமியின் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 2012ஆம் ஆண்டு முதல் இவர் இத்தேர்வு எழுதிவந்தார்.