‘மானங்கெட்ட கூட்டணி’

மதுரை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கக் கூடாது என சொன்னவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அதிமுக கூட்டணி பற்றி அன்புமணி ராமதாஸ் பாணியில் சொல்ல வேண்டும் என் றால் அது மானங்கெட்ட கூட்டணி. மக்கள் எங்கள் பக்கம் இருப்பதல் கூட்டணிக்காக அதிமுகவினர் கட்சிகளைத் தேடி அலைகின்றனர்,”என்றார்.