அதிமுக-தினகரன் இணைப்பு: ஆதீனம் வெளியிட்ட தகவலால் திடீர் பரபரப்பு

கும்பகோணம்: அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதற் கான பேச்சுவார்த்தை நடை பெறுவதாக மதுரை ஆதீனம் கூறியதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் டிடிவி தின கரன்.
தமிழக முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் மரணத் துக்குப் பின்னர் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாகப் பிரிந் தது. மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக ஓபிஎஸ் வைத்த நிபந்தனைகளுள் ஒன்று டிடிவி தினகரனை ஓரங்கட்டு வது. அந்த கோரிக்கை ஏற்று செயல்படுத்தப்பட ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிகள் ஒன்றாகின.
தனித்துவிடப்பட்ட டிடிவி தினகரன் இணைப்பு வியூ கத்தை எல்லாம் முறியடித்து ஆர்.கே.நகரில் சுயேச்சை யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குக்கர் சின்னமும் பிரபலமானது. அந்த வெற் றியைத் தொடர்ந்து தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலையும் வெளி யிட்டுவிட்டார்.
இந்நிலையில்தான் நேற்று மதுரை ஆதீனம் (படம்), கும்பகோணத்தில் செய்தி யாளர்கள் சந்திப்பில் அதிமுக வுடன் அமமுகவை இணைப் பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறினார்.
இதனைச் சுட்டிக்காட்டி யுள்ள தினகரன், ஆதீனம் சொல்லியிருப்பது ஆதார மற்றது எனக் கூறியிருக் கிறார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அதிமுகவில் இணைப்பதற் காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக ஆதீ னம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற் றது. அது உண்மையும் அல்ல. அதற்கு அவசியமும்இல்லை,” எனக் கூறியுள்ளார்.