திமுக கூட்டணிக்கு வெற்றி என கணிப்பு

இந்தியாவில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்துவரும் நிலையில் தமிழகத்தில் மக்க ளவைத் தேர்தல், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர் தல் ஆகியவற்றின் வெற்றி நில வரம் குறித்து ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கமும் பண்பாட்டு மக்கள் தொடர்பகமும் இணைந்து 16 நாட்களாக 40 தொகுதிகளில் மக்களைச் சந் தித்து கருத்துகளைத் திரட்டின. மொத்தம் 21,464 பேரிடம் நேரடி யாகக் கருத்துக் கேட்டதாக நேற்று ஆய்வு முடிவுகளை வெளி யிட்ட பண்பாட்டு மக்கள் தொடர் பக நிர்வாகி திருநாவுக்கரசு கூறினார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதேநேரம் அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒன்று அல்லது இரு தொகுதி களில் வெற்றி பெறும்.
திமுகவின் வாக்கு வங்கி 49 விழுக்காடு வாக்குகளையும் அதிமுக 32 விழுக்காடு, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பிற கட்சிகள் 19 விழுக் காடு வாக்குகளையும் பெறும்.
18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட் டணி 9 முதல் 11 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது.
அதிமுக கூட்டணி 2 தொகுதி களில் மட்டுமே வெல்லும் நிலை காணப்படுகிறது.
மற்ற தொகுதிகளை அமமுக வெல்லக்கூடும். அதாவது அதி முகவைவிடவும் அமமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!