‘ஆயுள் முழுவதும் அதிமுகவில்தான்’

தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தாம் பாரதிய ஜனதாக் கட்சியில் சேரப்போவதாகக் கூறும் வதந்திகள் 'வடிகட்டின பொய்' எனத் தெரிவித்திருக்கிறார்.

தொண்டனாகிய தம்மை உச்சாணிக் கொம்புக்கு உயர்த்தி முதல்வர் பொறுப்பு உள்பட பல்வேறு மாநில அமைச்சு பொறுப்புகளை வழங்கியது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்தான் என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசியலை 'இரு இலை இயக்கம்தான் தீர்மானிக்கும்' எனக் கூறிய திரு பன்னீர்செல்வம், நாட்டுப்பற்று, இறை நம்பிக்கை உள்ளிட்ட பல கொள்கைகளைத் தமது கட்சியும் பாஜகவும் பகிர்வதாகத் தெரிவித்தார்.

ஊடகங்கள் நடுநிலை மறந்து 'புரளியால் குறளி வித்தை' செய்வதாக அவர் கண்டித்தார். இதற்குத் தமிழக மக்கள் செவிசாய்க்கமாட்டார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!