தமிழக முதல்வர்: கோமதிக்கு ரூ.10 லட்சம்

தமிழகத்தைச் சேர்ந்த திடல்தடப் போட்டி வீராங்கனை கோமதிக்கு 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் கோமதி பெருமை சேர்த்திருப்பதாக அவர் பாராட்டினார்.

ஆசிய திடல்தட வெற்றியாளர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் முன்வந்து நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவருக்கு ரூ.15 லட்சத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் அவருக்கு ரூ.10 லட்சத்தையும் காங்கிரஸ் கட்சி அவருக்கு ரூ.5 லட்சத்தையும் வழங்கியுள்ளன. மேலும், நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றத்தின் சார்பில் 5 லட்ச ரூபாய் காசோலையை கோமதிக்கு வழங்கினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon