காங்கிரஸ் தலைவர் அழகிரி: நாளும் புதிய உடை, நாளும் ஓர் அவதூறே மோடி பாணி

காங்கிரஸ் தலைவர் அழகிரி: நாளும் புதிய உடை, நாளும் ஓர் அவதூறே மோடி பாணி

1 mins read
8a526ca5-62c0-417b-a81c-9ef41126a822
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி -

சென்னை: பிரதமர் மோடி, வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் நாள்தோறும் விதவிதமான உடைகளை அணிவதைப்போல விதவிதமான அவதூறுகளைப் பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

மோடியின் பேச்சையும் செய் கையையும் பார்த்து மக்கள் சலிப் படைந்துவிட்டார்கள். மத்தியிலும் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதியாகிவிட்டது என்று அவர் கூறினார்.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்கிற கட்சி உருக்குலைந்து சிதறப்போகிறது என்றும் ஆட்சி போன மறுநாளே அதிமுக கூடாரம் காலியாகிவிடும் என்றும் தெரிவித்த அழகிரி, தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததும் அந்த மாநிலத்திற்கு விடிவுகாலம் ஏற் படும் என்றார்.