சுடச் சுடச் செய்திகள்

திருச்சியில் 66 லட்சம்; சென்னையில் 30 லட்சம் தங்கம், வெளிநாட்டுப் பணம் மீட்பு 

ஆலந்தூர்: வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்படும் தங்க நகைகள், வெளி நாட்டுப் பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஹாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும்  மலேசியாவில் இருந்து கடத்த முயன்ற ரூ.9 லட்சம் வெளிநாட்டுப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஹாங்காங்கில் இருந்து சென் னைக்கு வந்த விமானத்தில் சென் னையைச் சேர்ந்த அசாருதீன், 35, கௌதம், 32, ரியாஸ்கான், 35, ஆகியோர் வந்தனர். 

சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களது உடைமைகளைச் சோதித்தனர். இருவரும் உள் ளாடைக்குள் மறைத்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம், ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள புகைப்படக் கருவி உதிரி பாகங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலை யத்தில் இருந்து மலேசியத் தலை நகர் கோலாலம்பூருக்கு சுற்றுலா செல்ல கர்நாடகாவை சேர்ந்த முகமது, 47, என்பவர் வந்தார். அவரது உடைமைகளைச் சோதனை செய்தபோது சூட்கேசில் வெளிநாட்டுப் பணமான சவுதி அரேபிய ரியால், மலேசிய ரிங்கிட் ஆகியவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 

ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் சிக்கியது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon