ரூ.41 லட்சம் தங்கம் பறிமுதல்; நான்கு பெண்களிடம் விசாரணை 

ஆலந்தூர்: துபாய், கொழும்பில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நான்கு பெண்கள் கடத்தி வந்த ரூ.41.5 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 277 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட நான்கு பெண்களிடமும் விசாரணை தொடர்ந்து வருகிறது.

சென்னைக்குத் துபாயில் இருந்து விமானத்தில் வந்த ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சேர்ந்த ரஜனி, 45, சரஸ்வதி, 35, ஆகியோரின் நடவடிக்கையில் சந் தேகம் அடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து அவர்களது உடைமைகளை அதி காரிகள் சோதித்தனர். அப்போது ரூ.32,52,000 மதிப்புள்ள 997 கிராம் எடையுள்ள தங்கச் சங் கிலி, தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னை வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 53 வயது லட்சுமியிடம் சோதனை நடத் தியதில் அவர் மறைத்து வைத் திருந்த ரூ.6,72,000 மதிப்புள்ள 206 கிராம் தங்கத்தைக் கைப்பற்றி னர்.

மேலும் கொழும்பில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது அலி பாத்திமாவை 45, சோதனை செய்ததில் ரூ.2,42,000 மதிப்புள்ள 74 கிராம் தங்கத்தை அதிகாரி கள் கைப்பற்றினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!