சரவணன், சரத்பிரபு, இப்போது ரி‌ஷி: திமுக தலைவர் கவலை

சென்னை: டெல்லியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழக மாணவர் சரவணனும் டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபு வும் ஏற்கெனவே மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், டெல்லி ஜவ கர்லால் நேரு பல்கலை.யில் எம் ஏ ஆங்கிலம் இறுதியாண்டு பயின்ற தமிழ்நாடு- வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரி‌ஷி ஜோஸ்வா தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளி யாயின. 

இந்தச் சூழலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் திமுக தலைவர்  ஸ்டாலின், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உயர் கல்வி பயிலச் செல் லும் தமிழக மாணவர்களின் பாது காப்பினை உறுதி செய்திட ஆக்க பூர்வமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்