சுடச் சுடச் செய்திகள்

துக்கம் மறைத்து தங்கைக்கு திருமணம் 

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரைக் கிராமத்தில், தந்தை இறந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்திவைத்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

  அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், 67, வசந்தா, 51, தம்பதியின் மகளான 31 வயது கனிமொழிக்கும் நன்னி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுரு, 34, என்பவருக்கும் இம்மாதம் 17ஆம் தேதி லால்குடியில் திருமணம் நடந்தது. அதற்கு ஒருமாதம் முன்னதாக தலையில் கட்டி ஏற்பட்டதால் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நடராஜன் இம்மாதம் 16ஆம் தேதியே மரணமடைந்துவிட்டார். 

   தந்தையைக் கவனித்துக்கொண்டு மருத்துவமனை யிலேயே இருந்துவந்த கனிமொழியின் அண்ணன் உதய குமார், 40, தந்தை இறந்த செய்தியைத் திருமணத்துக்குப் பிறகுதான் உறவினர்களிடம் தெரிவித்தார். மணமக்கள் உட்பட பலரும் மருத்துவமனைக்குச் சென்று நடராஜன் உடலை எடுத்துவந்து ஆகவேண்டியவற்றைக் கவனித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon