டிடிவி தினகரன்: தோல்வியால் அமமுக அழிந்து விடாது

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோ­ச­னைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று நடந்தது.

அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் (படம்) தலைமை­யில் நடந்த அந்தக் கூட்டத்தில்வெற்றிவேல், செந்தமிழன், தங்கத் தமிழ்ச் செல்வன், பழனியப்பன் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகி யோர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மாவட்ட வாரியாகக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் விழுக்காடு குறித்து நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் காலங்களில் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கினார்.

அடுத்து வரும் தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் பெரு வாரியான வெற்றிகளைப் பெறு­வது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில்

தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். மக்கள் தீர்ப்பை ஏற்று, தொடர்ந்து மக்கள் நலனுக்காக பாடுபடுவோம். தேர்தலில் தோற்­றுப் போனதால் அமமுக அழிந்துவிடாது. திமுகவும் அதிமுகவும்கூட பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!