புதுச் சட்டம் மூலம் கடைகள், நிறுவனங்கள் இனி 24 மணி நேரமும் திறந்திருக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இனி கடைகள், நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்கான சட்டம் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி நாடு முழுவதும் கடைக ளும் தனியார் நிறுவனங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டது.

அந்தச் சட்ட மசோதாவின்படி நாடு முழுவதும் திரை அரங்குகள், உணவகங்கள், அனைத்துவகை கடைகள், வங்கிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை வாரத் தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படும்.

இந்தச் சட்ட மசோதாவை மாநி லங்கள் அப்படியே ஏற்றுச் செயல் படுத்தலாம். அல்லது தங்கள் நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து அமல்படுத்தலாம் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் சட்ட மசோதாவை மகாராஷ்டிரா அரசு அமலுக்குக் கொண்டு வந்தது.

அம்மாநிலத்தில் கடந்தாண்டு முதல் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வரை கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதேபோல் 24 மணி நேரமும் இயங்குவதற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கலாம் என மாநிலத் தொழி லாளர் ஆணையர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். தொழிலா ளர் நலன் சம்பந்தப்பட்ட இந்த நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில் 24 மணி நேர செயல்பாட்டுக்கு அனுமதி அளிக்கலாம் என்று ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு விரை வில் வெளியிடும் என எதிர்பார்க் கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!