தமிழ்நாட்டில் எதிர்ப்பலை: கல்வி வரைவுத் திட்டம் திருத்தி அமைப்பு

இந்தியாவில் மும்மொழிக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியாவின் மத்திய அரசாங்கம் முன்வைத்த பரிந் துரைக்கு தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, பரிந்துரைக்கப்பட்ட வரைவுத் திட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் திருத்தப்பட்ட புதிய வரைவுத் திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மொழியை மாணவர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் வரைவுத் திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப் பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்திதான் படிக்க வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்து வேறு மொழியையும் தேர்வுசெய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.

முதலில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையின்படி, இந்தி பேசாத மாநிலங்களில் மாணவர்கள் ஆங்கிலம், இந்தி, தாய்மொழி ஆகியவற்றைக் கற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தி பேசும் மாநிலங்களில், இந்தியுடன் ஆங்கிலமும் ஏதேனும் ஓர் இந்திய மொழியும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

பன்மொழித் திறன் இந்தியாவுக்கு அவசியமானதொன்று என்று வரைவுத் திட்டம் தெரிவித்திருந்தது. மும்மொழிக் கல்விக் கொள்கையை ஒரு வரமாகக் கருத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முன்வைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை ஏற்க தமிழ்நாடு, கர்நாடகத் தலைவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்திமொழி தமிழ்நாட்டில் திணிக்கப்படுவது ஒருபோதும் சகித்துக்கொள்ளப் படாது என்று அம்மாநிலத் தலை வர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“ஜவஹர்லால் நேரு, அறிஞர் அண்ணா, கருணாநிதி போன் றோர் கொண்டு வந்த இருமொழிக் கொள்கை மற்றும் மொழிவாரி மாநிலங்கள், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக மத்தியில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு செய்த குழு, இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்தைப் பரிந்துரை செய்து மத்திய அரசிடம் வழங்கியது.

“இதன் தொடர்ச்சியாக இந்தி கட்டாய மொழியாக்கப்படும் என்று தகவல் வெளியாகி, பல்வேறு மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசித்துச் சுமூக தீர்வு வழங்கப்படும் என உறுதி அளித்தது.

“இது தமிழர்களை உரசிப் பார்க்கும் செயலாகும். பன்மொழி பண்பாடு இருக்கும் நாட்டில் மக்கள் கருத்துகளை அறியாமல் மத்திய அரசு முடிவெடுக்காது என நம்புகிறோம்,” என்றார் ஸ்டாலின்.

புதிய கல்விக் கொள்கை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு மாநில அரசுகளிடம் கலந்துரையாடப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கர் உறுதி அளித்தார்.

“மனிதவள மேம்பாட்டு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை வெறும் வரைவுத் திட்டம்தான். இதுகுறித்து முதலில் பொதுமக்களின் கருத் துகளைப் பெற்ற பிறகும் மாநில அரசாங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகும் வரைவுத் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் படும். இந்திய அரசாங்கம் அனைத்து மொழிகளையும் மதிக் கிறது. எந்த மொழியும் திணிக் கப்படாது,” என்று டுவிட்டர் மூலம் அமைச்சர் ஜெய்சங்கர் தெரி வித்தார்.

இந்தக் கருத்தையே இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார். தமிழ்மொழியின் மேம்பாட்டை மத்திய அரசு ஆதரிக்கும் என்றார் அவர். புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டம் குறித்து அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் அதை நன்கு ஆராய்ந்து, அதுகுறித்து விவாதித்து முடிவு செய்யும்படி இந்திய துணை அதிபர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!