காரில் விரட்டி கொள்ளை முயற்சி: ஐந்து பேர் கைது

கோவை: கோவை மதுக்கரை அருகே வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை அடிக்க முயன்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பைசல், மொய்தீன் என்ற இரு சகோதரர்கள் கடந்த 3ஆம் தேதி கோவை சொக்கம்புதூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து துணிகளை வாங்கிக்கொண்டு இன்னோவா காரில் கேரளா சென்றுகொண்டு இருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத சிலர் மற்றோர் இன்னோவா காரில் விரட்டி வந்து சகோதரர்கள் காரை மறித்தனர்.

தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி மிரட்டி, பைசல் வந்த காரில் சோதனை செய்தனர். சந்தேகம் அடைந்த பைசலும் அவரது தம்பியும் கூச்சலிட்டதால் பொதுமக்கள் ஒன்று திரண்டதைக் கண்டதும் கொள்ளையர்கள் தாங்கள் வந்த காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரை கைது செய்த போலிஸ் அதிகாரிகள், அவர் களை விசாரித்து வருகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!