காஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாகக் கூறி ரூ. 1 கோடி மோசடி; தயாரிப்பாளர் கைது

ராமநாதபுரம்: நடிகை காஜல் அகர்வாலை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்து தருகிறோம் என்ற உத்தரவாதத்தை நம்பி தொழிலதிபரின் மகன் ஒருவர் ரூ.1 கோடியை இழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இணையத்தளம் மூலம் ஆசை காட்டி மோசடி செய்ததுடன் மிரட்டலும் விடுத்த சினிமா தயாரிப்பாளர் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலபதிபரின் மகன் ஒருவர், நடிகை காஜல் அகர்வாலை சந்தித்துப் பழக சமூக வலைத்தளத்தின் மூலம் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட, பதிவுத் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

காஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக உறுதியளித்த சமூக வலைத்தள கும்பல், அவரிடம் 1 கோடி ரூபாய் வரை பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில், ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளைஞர், மன உளைச்சலால் கோல்கத்தாவுக்குச் சென்றுவிட்டார்.

இதுகுறித்த போலிஸ் புகாரை அடுத்து கோல்கத்தா விரைந்த ராமநாதபுரம் காவல்துறையினர், இளைஞரை மீட்டு தமிழகம் அழைத்து வந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சரவணக்குமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இளைஞரிடம் இருந்து பறித்த பணத்தில் 68 லட்சம் ரூபாயை கிரிக்கெட் சூதாட்டத்தில் தோற்றுவிட்டதாக சரவணன் கூறியுள்ளார்.

அவரிடம் எஞ்சியிருந்த 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவர் களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!