தமிழை இழந்தால் நமது நிலத்தை இழப்போம்: வைரமுத்து

நாமக்கல் தமிழாற்றுப் படை நூல் அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “3,000 ஆண்டுகளுக்கு முன் தமிழன் என்ன பேசினானோ அதைத்தான் தற்போது நாம் பேசி வருகிறோம். எழுத்து முறை மாறி இருக்கலாம். தமிழ் மாறவில்லை. மொழி அடிப்படையில்தான் மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. நாம் நமது மொழியை இழந்தால் நமது நிலத்தை இழக்க நேரிடும்,” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வைரமுத்து கூறும்போது, “``இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்கும் என்ற ஒரு கருத்து உரைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழருக்கு மட்டும் அல்ல, இந்தி மொழி பேசாத எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது. சூரியன்கூட ஒட்டுமொத்த பூமிக்கும் ஒரே பகலைக் கொண்டுவந்து இணைக்க முடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இணைக்க முடியும்,” என்று கேட்டார்.

இந்தியை கட்டாயப்படுத்துவது தவறில்லை: நடிகை காயத்ரி ரகுராம்

நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். இந்தி மொழி குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தாய்மொழிக்கும் தேசிய மொழிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவின் பல மாநிலங்களில் இந்தி பொது மொழியாக பேசப்பட்டு வருவதால் இந்திய மக்கள் இணைவதற்கு இந்தி வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பள்ளி செல்ல அடம் பிடிக்கும் குழந்தைகளை கட்டாயப்படுத்துவது போல் எதிர்காலத்திற்கு நல்லது என்பதால் இந்தியை கட்டாயப்படுத்துவது தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!