கணக்குக்குப் பதில் பாலியல்: ஆசிரியருக்கு வேலை போனது

நாமக்கல்: கணக்குப் பாடம் நடத்த வேண்டிய ஓர் ஆசிரியர் மாணவியருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் பாடம் நடத்தி தொல்லை கொடுத்ததாகப் புகார் கிளம்பியதை அடுத்து அந்த ஆசிரியருக்கு வேலை போய்விட்டது. 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே செயல்படும் ஓர் அரசுப் பள்ளியில்  கணக்கு ஆசிரியராகப் பணியாற்றும் ஒடுவன்குறிச்சியைச் சேர்ந்த சுரேஷ், 37, என்பவர் கடந்த ஆறு மாத காலமாக 8ஆம் வகுப்பு மாணவியருக்குப்பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகப் புகார் கிளம்பியது. 

மாணவிகளே பல தடவை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. கடைசியாக போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த ஆசிரியரைக் கல்வித் துறை தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்கிவிட்டது. 

ஆசிரியர் சுரேஷ் மீது திருட்டு புகாரும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் சுரேஷ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அசைவின்றி இருந்த ஹிருத்திக்கின் உடல் நீலம்பூத்திருந்ததைப் பார்த்து உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்தின் உதவியை நாடினர் சக்தி முருகன் தம்பதி. படம்: ஊடகம்

22 Nov 2019

மலேசியா - சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை உயிரிழப்பு

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் புதிய கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்

22 Nov 2019

ஓபிஎஸ்: அதிமுக புதிய கட்சிகளுடன் கைகோக்கலாம்