அமமுகவுக்குத் தாவிய தேமுதிகவினர்

கடலூர்: கடலூரில் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தில் இணைந்தனர். 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, கடலூர் வடக்கு மாவட்டம் நல்லூர் தெற்கு ஒன்றியம் பாசிகுளம் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர், அக்கட்சியில் இருந்து விலகி, கடலூர் வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. அக்ரி பி. முருகேசன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததாக அமமுக தெரிவித்துள்ளது.