சென்னை: தமிழ்க் கலைக்கழகக் கூட்டத்தில் ஆய்வுக்குத் தாக்கல்செய்யப்பட்ட 550 சொற்களில் 422 சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித்தது.
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககத்தில் தமிழ்க் கலைக்கழகத்தின் 52வது கூட்டம் சென்னையில் நடந்தது.
கூட்டத்தில் 550 தமிழ்ச் சொற்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 422 சொற்களுக்குக் கலைக்கழக வல்லுநர் குழு ஒப்புதல் அளித்தது.
அகர முதலி இயக்ககப் பதிப்பாசிரியர்கள், உதவி பதிப்பாசிரியர் மற்றும் தொகுப்பாளர்கள், சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை முதுகலை மாணவியர் உட்பட பலரும் பங்கேற்று சொல்லாக்கப் பணியை மேற்கொண்டிருந்தனர்.