சுடச் சுடச் செய்திகள்

பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டுப் பயணிகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நடந்த பொங்கல் திருவிழாவில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாட்டுவண்டியில் கிராமத்தைச் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க், இத்தாலி, மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 48 சுற்றுலாப் பயணி கள் கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். வழுக்கு மரம் ஏறுதல், கபடி, உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளையும் அவர்கள் கண்டு ரசித்தனர். படம்: ஊடகம்

தொடர்ந்து, 10 மாட்டு வண்டிகளில் வெளிநாட்டுப் பயணியர் ஏறி, கிராமம் முழுவதையும் வலம் வந்தனர். கிராம மக்கள் திரண்டு, அவர்களுடன், ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon