தமிழகத்தில் கிருமி பாதிப்புக்கு 2வது நபர் மரணம்

சென்னை: தமி­ழ­கத்­தில் 2வது நபர் கொரோனா கிரு­மித் தொற்­றுக்கு பலி­யா­கி­யுள்­ளார்.

கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்ட விழுப்­பு­ரம் சிங்­கா­ரத் தோப்­புப் பகு­தி­யைச் சேர்ந்த 51 வய­தான நப­ருக்­குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது. 

இவ­ருக்கு ஏற்­கெ­னவே ‘ஆஸ்­துமா’ போன்ற உடல்­நல கோளா­று­கள் இருந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. 

இந்த நிலை­யில் வெள்­ளிக்­கி­ழமை மாலை அவ­ருக்கு மூச்­சுத் திண­றல் அதி­க­ரித்­தது.

இத­னால் மருத்­து­வர்­கள் அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளித்­த­னர். ஆனால் சிகிச்சை பல­ன­ளிக்­கா­மல் நேற்று காலை 7.45 மணி­ய­ள­வில் அவர் உயி­ரி­ழந்­தார். 

இதை­ய­டுத்து சட்­டத்­துறை அமைச்­சர் சி.வி.சண்­மு­கம்,  விழுப்­பு­ரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்­கு­மார் தலை­மை­யில் விராட்­டிக்­குப்­பம் பாதை­யில் அவ­ரது உடல் அடக்­கம் செய்­யப்­பட்­டது. 

கொரோனா கிருமித் தொற்றால் தமி­ழ­கத்­தில் 2வது நபர் உயிரிழந்­தி­ருப்­ப­தாக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ர­பூர்­வ­மாக தெரி­வித்­தது. 

கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்டு இறந்­த­வர் விழுப்­பு­ரத்­தில் உள்ள அரசு நடு­நி­லைப்­பள்­ளி­யில் தலைமை ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றி­வர்.

விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் வெளி­நாடு, வெளி­மா­நி­லங்­க­ளுக்­குச் சென்று திரும்­பிய 2,070 பேர் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைக்­காக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுக் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். 

அவர்­களில் 65 பேர் டெல்லி நிஜா­மு­தீன் மாநாட்­டுக்­குச் சென்று திரும்­பி­ய­வர்­கள் என்­பது தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து அதில் 55 பேரை அடை­யா­ளம் கண்ட சுகா­தா­ரத்­துறை அவர்­களை மருத்­து­வ­ம­னை­யில் தனி­மைப்­ப­டுத்தி அவர்­க­ளின் ரத்த மாதி­ரி­களை ஆய்­வுக்கு அனுப்­பி­யது. 

அதில் 9 பேருக்­குக் கொரோனா தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. 

இத­னால் விழுப்­பு­ரத்­தில் கோலி­ய­னூர், விக்­கி­ர­வாண்டி, திண்­டி­வ­னம், முகை­யூர் உள்­ளிட்ட இடங்­களில் 21க்கும் மேற்­பட்ட பகு­தி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக மாவட்ட நிர்­வா­கம் அறி­வித்­தது.

விழுப்­பு­ரத்­தில் கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்ட 9 பேரில் இறந்­த­வ­ரும் ஒரு­வர்.

தமிழகத்திலேயே சென்னை யில்தான் கொரோனா கிருமியால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் சென்னையில் மட்டும் 81 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.