‘90% பேருக்கு அறிகுறி இல்லை’

சென்னை: சென்­னை­யில் கொரோனா கிரு­மித் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்ளவர்களில் 90 விழுக்­காட்­டி­ன­ருக்கு அறி­கு­றி­களே இல்லை என்று மாந­க­ராட்சி ஆணை­யர் பிர­காஷ் அதிர்ச்சி தக­வல் வெளி­யிட்­டுள்­ளார்.

சென்னை ரிப்­பன் மாளி­கை­யில் 100 கிரு­மி­நா­சினி இயந்­தி­ரங்­க­ளின் இயக்­கத்­தைத் தொடங்கி வைத்து அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

“சென்னை மாந­க­ராட்­சிக்கு உட்­பட்ட பகு­தி­களில் கொவிட்-19 கிரு­மித் தொற்று பரி­சோ­த­னையை நாள் ஒன்­றுக்கு 2,000ஆக உயர்த்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொது­மக்­கள் சமூக இடை­வெ­ளியை கட்­டா­யம் கடைப்­பி­டிப்­பதை மேலும் கடு­மை­யாக்க அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 22,000 படுக்­கை­கள் தயார் நிலை­யில் உள்­ளன. நோய்த்­தொற்று அதி­கம் உள்ள ராய­பு­ரம், கோடம்­பாக்­கம் உள்­ளிட்ட 6 மண்­ட­லங்­க­ளி­லும் மாந­க­ராட்­சி­யின் கண்­கா­ணிப்பு தீவி­ர­மாக்­கப்­படும்,” என்று அவர் தெரி­வித்­தார்.

“கடை­களில் ‘சமூக வில­கல்’ சரி­யான முறை­யில் பின்­பற்­றப்­ப­டு­கி­றதா என்­ப­தைக் கண்­கா­ணிக்க தனிக் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. மாந­க­ராட்­சி­யின் விதி­மு­றை­களை பின்­பற்­றாத வணிக நிறு­வ­னங்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

“சென்­னை­யில் ஒரு சதுர கிலோ­மீட்­ட­ருக்­குள் 26,000 முதல் 55,000 பேர் வரை வசிக்­கின்­ற­னர். கிராமப்­ பு­றங்­களை விட பல­ம­டங்கு அதி­க­மாக சென்­னை­யில் மக்­கள் நெருக்­கம் உள்­ளது. அத­னால்தான் சென்­னை­யில் மட்­டும் அதிக எண்­ணிக்­கை­யில் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஏற்­ப­டு­கின்றன.

“கொரோனா தொற்று பரி­சோ­த­னை­யும் அதி­க­மாக செய்­யப்­பட்டு வரு­கிறது. இது­வரை 22,000க்கும் அதி­க­மான மாதி­ரி­கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதில் 600க்கு அதி­க­மா­னோ­ருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. சென்­னை­யில் கொரோனா தொற்று உறு­தி­யா­கும் நபர்­களில் 90% பேருக்கு எவ்­வித அறி­கு­றி­களும் இல்லை என்று ஆணை­யர் பிர­காஷ் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!