வெளிநாடுவாழ் தமிழர்கள் நாடு திரும்ப தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக வெளி­நா­டு­களில் சிக்­கித் தவிக்­கும் தமி­ழர்­கள் நாடு திரும்புவதற்காக தமி­ழக அரசு சிறப்பு ஏற்­பாடு ஒன்­றைச் செய்­துள்­ளது.

குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஏராளமான தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவ்­வாறு நாடு திரும்ப விரும்பு­வோர் nonresidenttamil.org என்ற இணை­யத்­த­ளத்­திற்­குச் சென்று, தங்­க­ளைப் பற்­றிய விவ­ரங்­க­ளைப் பதி­வு­செய்­து­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில், “கொரோனா தொற்­றைத் தடுப்­ப­தற்­காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் இந்­தியா முழு­வதும் ஊர­டங்கு அம­லில் இருந்து வரு­கிறது. இத­னால் அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­களும் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னால் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த பல மாண­வர்­கள், சுற்­றுப்­ப­ய­ணி­கள் மற்­றும் வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­யும் தொழி­லா­ளர்­கள், பணி­யா­ளர்­கள் உள்­ளிட்­டோர் இந்­தியா திரும்ப முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

“அவ்­வாறு வெளி­நா­டு­களில் இருக்­கும் தமி­ழர்­களில் உட­ன­டி­யா­கத் தமிழ்­நாட்­டிற்­குத் திரும்ப விரும்­பு­வோ­ரின் நல­னுக்­கா­க­வும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரின் நல­னைக் காத்­தி­டும் நோக்­கி­லும் அவர்­க­ளது எண்­ணிக்­கை­யினை அறி­யும் வகை­யி­லும் நாடு திரும்பு­வோ­ருக்­குத் தனி­மைப்­ப­டுத்­தல் வச­தி­களை ஏற்­ப­டுத்­த­வும் அவர்­களைப் பற்­றிய தக­வல்­க­ளைப் பெறு­வ­தற்­கா­க­வும் இணை­யப் பதிவு வசதி புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது,” எனக் கூறப்­பட்­டுள்­ளது.

ஆனா­லும், விமா­னப் போக்­கு­வரத்­துச் சேவை மீண்­டும் தொடங்­கிய பின்­னரே அவர்­கள் தமி­ழ­கம் திரும்ப முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!