புதிய கிருமித் தொற்றில்லாத மாவட்டமான கரூர், தூத்துக்குடி

தூத்­துக்­குடி: கொரோனா கிரு­மி­யில் இருந்து முழு­வ­தும் மீண்ட தூத்­துக்­குடி, கரூர் மாவட்­டங்­கள் தொற்­றில்­லாத மாவட்­ட­மாக அறி­விக்­கப்­பட்டு ஆரஞ்சு மண்­ட­ல­மாகி உள்­ளன. இது ஒரு­பு­ற­மிருக்க, ஈரோடு மாவட்டமும் இப்போது ஆரஞ்சு மண்டலத்­தில் இணைந்­துள்­ளது.

கடந்த 14 நாட்களுக்­குப் பிறகு ராணிப்­பேட்டை, ராம­நா­த­பு­ரம் ஆகிய மாவட்­டங்­களில் மீண்­டும் கொரோனா கிரு­மித் தொற்று பரவி உள்­ள­தால் அந்த மாவட்­டங்­கள் சிவப்பு மண்டலத்­தில் சேர்க்­கப்­பட்டு உள்­ளன.

தமி­ழ­கத்­தில் நீல­கிரி, ஈரோடு, தர்­ம­புரி, திரு­வண்­ணா­மலை, கள்­ளக்­கு­றிச்சி, பெரம்­ப­லூர், அரி­ய­லூர், புதுக்­கோட்டை, சிவ­கங்கை, கன்­னி­யா­கு­மரி ஆகிய மாவட்­டங்­கள் ஆரஞ்சு மண்­ட­லத்­தில் உள்­ளன. கிருஷ்­ண­கிரி மாவட்­டம் பச்சை மண்­ட­லத்­தில் நீடித்து வரு­கிறது.

ராணிப்­பேட்டை மாவட்­டத்­தில் கடந்த 14 நாட்­க­ளுக்­கும் மேலாக யாருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டா­த­தால் அது ஆரஞ்சு மண்­ட­லத்­தில் இருந்­தது.

இந்­நி­லை­யில் புதி­தாக ஒரு­வ­ருக்கு தொற்று கண்டு பிடிக்­கப்­பட்­ட­தால் ராணிப்­பேட்டை மீண்­டும் சிவப்பு மண்­ட­லத்­தில் சேர்க்­கப்­பட்டு உள்­ளது.

இதே­போல் ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தி­லும் புதி­தாக மூவ­ருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தால் சிவப்பு மண்­ட­லத்­தில் இணைந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!