கிருமி பரப்பும் கோயம்பேடு சந்தை

அரி­ய­லூர்: சென்­னை­யில் உள்ள கோயம்­பேடு காய்­க­றிச் சந்­தை­யில் பணி­பு­ரிந்துவிட்டு அரி­ய­லூர், பெரம்­ப­லூர், கட­லூர் திரும்­பிய கடை உரி­மை­யா­ளர்­கள், ஊழியர்­கள், வியா­பா­ரி­கள் உள்­ளிட்ட 27 பேருக்கு கொரோனா கிருமி தொற்­றி­யி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­தை­யோடு தொடர்­பு­டையவர்­க­ளி­டம் நோய்த்­தொற்று பரவி வரு­வது தொடர்ச்­சி­யா­கக் கண்­டறியப்­பட்டு வரு­கிறது.

கடந்த 4 நாட்­களில் கோயம்­பேடு சந்­தை­யி­லும் அதைச் சுற்றி யுள்ள பகு­தி­க­ளி­லும் வேலை­பார்த்த 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், கோயம்­பேடு சந்­தை­யில் இருந்து சரக்கு வாக­னங்­கள் மூலம் ஊர் திரும்­பிய தொழி­லா­ளர்­கள் 27 பேருக்கு கிரு­மித் ­தொற்று இருப்பதாக நேற்று தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தை­யில் இருந்து சரக்கு வாக­னங்­களில் அரி­ய­லூ­ருக்கு திரும்­பிய 19 தொழி­லா­ளர்­களும் பெரம்­ப­லூர் திரும்­பிய ஒரு தொழிலாளி­யும் இத்­தொற்று பாதிப்­பால் திருச்சி அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் தனி­மைப்­படுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

ஏற்­கெ­னவே இத்­தொற்று இருந்த எட்டு பேர், இப்­போது 20 பேர் என ஆக­மொத்­தம் 28 பேரு­டன் ஆரஞ்சு மண்­ட­ல­மாக இருந்த அரி­ய­லூர் தற்­போது சிவப்பு மண்­ட­ல­மாக மாற்றம் பெற்றுள்­ளது.

அதே­போல் கோயம்­பேட்­டில் இருந்து கட­லூர் மாவட்­டம், விருத் தாச­லம் திரும்­பிய 7 தொழிலாளர்­க­ளுக்கு இத்­தொற்று இருப்பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு, சிதம்­ப­ரம் அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் அவர்கள் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்நிலையில், கோயம்­பேடு பகுதியில் இருந்து விருத்­தா­ச­லம், திட்­டக்­குடி, பண்­ருட்டி ஆகிய பகு­தி­க­ளுக்­குத் திரும்­பிய 600 பேரை கிரா­மம் கிரா­ம­மா­கச் சென்று தனி­மைப்­ப­டுத்தி, கண்­கா­ணித்து வரு­கிறது கட­லூர் மாவட்ட நிர்­வா­கம்.

இதற்­கி­டையே சென்னை, திரு வல்­லிக்­கே­ணி­யில் ஒரே குடும்­பத் தைச் சேர்ந்த 12 பேருக்கு கிருமி உறுதி செய்­யப்­பட்டு அவர்­கள் ஸ்டான்லி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!