இதை விட்டால் வேறெதுவும் தெரியாது என உதவிக்கு கோரிக்கை

ஊரடங்கின் காரணமாக செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள்கூட இல்லாமல் தவிப்பதாகவும் தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்குத் தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் எனவும் கோரியுள்ளனர். புதுக்கோட்டை, காந்திநகர் பகுதியில் 70 குடும்பத்தினர் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் ரூ.100, ரூ.200 வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வந்தனர்.

அவர்கள் கூறுகையில், “ஊரடங்கு இதுவரை கண்டிராத வறுமையைத் தந்துள்ளது. வருமானம் ஏதுமில்லை. 70 குடும்பத்தினரும் செருப்பு தைக்கும் தொழிலை மட்டுமே நம்பி உள்ளோம். எங்களுக்கு வேறு ஏதும் தொழில் தெரியாது. வீட்டில் குழந்தை களை வைத்துக்கொண்டு ஒரு லிட்டர் பால் வாங்கக்கூட வழியின்றி தவித்து வருகிறோம். அரசு கொடுத்த பத்து கிலோ அரிசி, ரூ.1,000 பணத்தை வைத்து எவ்வளவு நாளைக்கு உணவு உண்ண முடியும்? எங்கள் பிரச்சினைகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஒரு தீர்வு காணவேண்டும்,” என்று கூறியுள்ளனர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!