தொழிலாளர் பற்றாக்குறை: கட்டுமானத்துறையினர் கவலை

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்று ஒடுங்­கிய உட­னேயே பொரு­ளி­யலை ஊக்­கு­விக்க தமிழக அரசு முழு மூச்­சாக முயற்­சி­களை முடுக்­கி­விட்டு வரும் நிலை­யில், ஊழி­யர் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கு­வ­தா­க அந்த மாநி­லத்­தின் கட்­டு­மா­னத் துறை கவலை தெரி­வித்து இருக்­கிறது.

மாநி­லத்­தில் லட்­சக்­க­ணக்­கான வெளிமாநில ஊழி­யர்­கள் கட்­டு­மானத் துறை­யில் வேலை பார்க்­கி­றார்­கள். கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மாநி­லத்­தில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்புக்கு வந்­த­தால் கட்­டு­மான தொழில்­துறை உட்­பட எல்லாத் துறை­ க­ளுமே முடங்கி உள்ளன.

இந்­நி­லை­யில், ஜார்க்­கண்ட், பீகார் உள்­பட பல்­வேறு வெளி­ மாநி­லங்­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள் பல­ரும் பல வார கால­மாக வேலை­இல்­லா­மல் இருக்­கி­றார்­கள்.

என்­றா­லும் அவர்­க­ளுக்­குப் போதிய உண­வும் இருப்­பிட வசதி­யும் செய்து கொடுக்­கப்­ப­டு­வ­தாக கட்­டு­மா­னத் துறை முத­லா­ளி­கள் கூற­கி­றார்­கள்.

ஆனால் அவை எல்­லாம் போதிய அள­வுக்கு இல்லை என்­றும் இரண்டு மாத கால­மாகத் தங்­களுக்­குச் சம்­ப­ளமே கிடைக்­க­வில்லை என்­றும் புகார் தெரி­விக்­கும் வெளி மாநில ஊழி­யர்­கள், உட­ன­டி­யாக தங்­களைத் தங்­கள் ஊர்­க­ளுக்­குத் திருப்பி அனுப்­பும்­படி போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

வெளிமாநில ஊழி­யர்­கள் இல்­லா­மல் கட்­டு­மா­னப் பணி­க­ளைத் தொடர்­வது மிக­வும் சிர­மம் என்று ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் கூறு­கி­றார்­கள்.

இவ்­வே­ளை­யில், கட்­டு­மா­னப் பணி­கள் தொடங்­கி­விட்­டால் வெளி மாநில ஊழி­யர்­களில் பல­ரும் தொடர்ந்து வேலை பார்க்க முன் வரக்­கூ­டும் என்­றும் ஆனால் அவர்­கள் திருப்பி அனுப்­பப்­பட்­டு­விட்­டால் இரண்டு அல்­லது மூன்று மாத காலம் வெளிமாநில ஊழி­யர்­கள் இல்­லா­மல் காலம் தள்ள வேண்டி இருக்­கும் என்­றும் இந்­தி­யா­வின் நிலச் சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் சங்­கக் கூட்­ட­மைப்­பின் தமி­ழ­கப் பிரி­வின் தலை­வர் எஸ் ஸ்ரீத­ரன் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் வெளிமாநில ஊழி­யர்­களைத் தொடர்ந்து கட்­டு­மா­னப் பணி­களில் ஈடு­ப­டு­வதை ஊக்­கு­விக்­கவே தான் விரும்­பு­வ­தாக தமி­ழக அரசு தெரி­வித்தது.

அதே­வே­ளை­யில், தமி­ழ­கத்­தைச் சேர்ந்த தொழி­லா­ளர்­களை வேலை­களில் அமர்த்­தும்­ப­டி­யும் அதனால் அனுகூலம் கிடைக்கும் என்றும் கட்­டு­மா­னத் தொழில்­து­றை­யி­ன­ருக்கு அர­சாங்­கம் கோரிக்கை விடுத்து உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!