தமிழகத்தில் ஒரே நாளில் 231 பேருக்குத் தொற்று

சென்னை: தமிழ்­நாட்­டில் நேற்று அதி­காலை 8 மணி நில­வ­ரப்­படி புதி­தாக ஒன்­பது குழந்­தை­கள் உட்­பட 231 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவர்­க­ளை­யும் சேர்த்து அந்த மாநி­லத்­தில் மொத்­தம் 2,757 பேர் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் சுகாதார, குடும்ப நல்­வாழ்­வுத் துறை அமைச்சு தெரி­வித்­தது.

கிரு­மித்­தொற்று பாதித்­த­வர்­களில் 1,341 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­விட்­டார்­கள். 29 பேர் மர­ண­ம­டைந்து இருக்­கி­றார்­கள் என்­றும் அதி­கா­ர­பூர்வ புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. சென்னை யில்தான் பாதிப்பு மிகவும் அதி­க­மாக இருக்­கிறது.

அந்த நக­ரில் சனிக்­கி­ழமை 174 பேர் புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­னர். இவர்­க­ளை­யும் சேர்த்து அங்கு மொத்­தம் 1,257 பேரைக் கிருமி தொற்றி உள்­ளது.

தமி­ழ­கத்­தில் இது­வரை 1,828 ஆண்­களும் 928 பெண்­களும் 48 வயதுள்ள ஒரு திரு­நங்­கை­யும் கொரோனா நோய் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்று கார­ண­மாக திருநங்கை ஒரு­வர் பாதிக்­கப்­பட்டு இருப்­பது இதுவே முதல் முறை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

தமி­ழக மருத்­து­வ­ம­னை­களில் 1,384 பேர் சிகிச்சை பெற்று வரு வதா­க­வும் அதி­கா­ர­பூர்வ தக­வல் குறிப்­பிட்­டது.

மாநி­லத்­தில் தொடர்ந்து 12 மாவட்­டங்­கள் அதி­கம் பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­க­ளாக உள்­ளன. கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் எந்த பாதிப்­பும் இல்­லா­மல் பச்சை மாவட்­ட­மாக உள்­ளது. அதேவேளையில், தூத்துக்குடி பாதிப்பு இல்லாத பச்சை வட்டாரமாக ஆகிவருவதாக வும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!