அமைச்சர்: ஒரு மீட்டர் இடைவெளி அவசியம் என்பதே கோயம்பேடு சந்தை போதிக்கும் பாடம்

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்­றைத் தடுக்க சமூக இடை­வெளி மிக­வும் முக்­கி­யம் என்­ப­தையே கோயம்­பேடு சந்தை நில­வ­ரம் போதிப்­ப­தாக அமைச்­சர் ஆர் பி உத­ய­கு­மார் தெரி­வித்­தார்.

மக்­கள் பொறுப்­பு­டன் நடந்­து­கொண்டு ஒரு மீட்டர் சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்து நடந்­து­கொண்­டால் கூடிய விரை­வில் கொரோனா கிருமி மறைந்­து­வி­டும் என்று அவர் கூறி­னார். இதை வெற்­றி­க­ர­மான முறை­யில் சாதித்து முடிக்க ஒத்­துழைக்­கும்­படி அமைச்­சர் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊர­டங்கு, 144 சட்­டம் எல்­லாம் நடப்­பில் இருந்­தா­லும் கோயம்­பேடு சந்­தை­யில் எப்­போ­தும் மக்­கள் கூட்­டம் நிரம்பி வழிந்­தது. அங்கு சமூக இடை­வெ­ளியை ஒரு­வ­ரும் கடை­ப்பி­டிக்­க­வில்லை.

அதன் கார­ண­மாக அந்­தச் சந்தை கொரோனா சந்­தை­யாக ஆகி­யது.

சந்தையை வேறு இடத்­துக்கு மாற்ற அர­சாங்­கம் முயன்­றதை வியா­பாரிகள் ஏற்­க­வில்லை. அதை­ய­டுத்து லாரி­கள் வந்து ­ச­ரக்­கு­களை இறக்கி, ஏற்­றிச் செல்­லும் வசதி கொண்ட 194 காய்­கறி கடை­கள் மட்­டும் அந்தச் சந்­தை­யில் இயங்க அனு­மதிக்­கப்­பட்­டன.

இந்­நி­லை­யில், சந்­தை­யி­லி­ருந்து புறப்­பட்ட லாரி­கள் மூல­மாக சொந்த ஊர் திரும்­பிய காஞ்­சி­பு­ரம், கட­லூர், விழுப்­பு­ரம், அரி­ய­லூர் ஆகிய மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 119 பேருக்குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அந்­தச் சந்­தை­யில் இருந்து சென்­னை­யின் பல பகு­தி­க­ளுக்­கும் கிருமி பர­வி­ய­தா­க­வும் அதி­க­ாரி­கள் அ­பாய சங்கு ஊதி இருக்­கி­றார்­கள்.

இத­னி­டையே, மதுரை ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் செயல்­படும் கொரோனா தடுப்பு சிறப்புக் கட்­டுப்­பாட்டு அறை­யில் ஆய்வு செய்த திரு உத­ய­கு­மார், சமூக இடை­வெ­ளி­யின் முக்­கி­யத்தை உணர்த்­தி­னார்.

தமிழகத்தில் நோய் பாதிப்பு இருந்தாலும் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கை காரண மாக சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் உயிரிழப்பு குறைந்து உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இதன்மூலம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் செயல்படுவதாகவும் கூறினார்.

கொரோனா எதிர்ப்புப் போரில் பொது மக்கள் மேலும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!