தமிழகத்தில் தனிக்கடைகள், உணவகங்கள் திறப்பு

சென்னை: ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­களை தமி­ழக அரசுத் தளர்த்தி உள்­ளது. இதை­ய­டுத்து 40 நாட்­க­ளுக்­குப் பிறகு தமி­ழ­கம் முழு­வ­தும் உண­வ­கங்­கள், சிறு கடை­கள் நேற்று திறக்­கப்­பட்­டன.

அனை­வ­ரும் சமூக இடை­வெ­ளியை முறை­யா­கக் கடைப்­பி­டிக்க வேண்­டு­மென அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்­பின் அள­வைப் பொறுத்து தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்­துப் பகு­தி­களும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்­ட­லங்­க­ளாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கிருஷ்­ண­கிரி மாவட்­டம், பச்சை மண்­ட­லப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளது. நோய்த்­தொற்று குறை­வாக உள்ள ஆரஞ்சு மண்­டல பட்­டி­ய­லில் 24 மாவட்­டங்­களும் நோய்த்­தொற்று அதி­கம் உள்ள சிவப்பு மண்­டலப் பட்­டி­ய­லில் 12 மாவட்­டங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. சிவப்பு மண்டலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்­நி­லை­யில் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் சற்றே தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால் நேற்று முதல் தனிக் கடை­கள், உண­வ­கங்­கள் திறக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இவை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்­டுமே திறந்­தி­ருக்­கும். சுய­தொ­ழில் புரி­வோர்க்­கும் விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன. ஆரஞ்சு மண்­ட­லத்­தில் உள்ள தொழிற்­சா­லை­கள் செயல்­ப­ட­லாம். எனி­னும் நகர்ப்­ப­கு­தி­களில் உள்ள தொழிற்­பேட்­டை­களில் ஜவுளி நிறு­வ­னங்­கள் இயங்க அனு­மதி இல்லை.

சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள், தொழிற்­பேட்­டை­களில் 50 விழுக்­காடு பணி­யாளர்கள் மட்­டுமே வேலை செய்ய அனுமதிக்கப்­ப­டு­வர்.

இவ்­வாறு அரசு விதித்­துள்ள கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்­று­வ­து­டன், சமூக இடை­வெ­ளியை முறை­யாக கடைப்­பி­டித்து அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணி­வ­தும் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!