தமிழகத்தில் இருந்து சொந்த ஊர் திரும்ப 1.75 லட்சம் வெளி மாநிலத்தவர்கள் பதிவு

சென்னை: தமி­ழ­கத்­தில் இருந்து சொந்த ஊர்­க­ளுக்­குச் செல்ல சுமார் 1.75 லட்­சம் வெளி­மா­நி­லத்­த­வர்­கள் தங்­கள் பெயரை தமி­ழக அர­சி­டம் பதிவு செய்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இதை­ய­டுத்து அனை­வ­ரும் சிக்­க­லின்றி நாடு திரும்ப தமி­ழ­கம் சார்­பில் மாநில வாரி­யாக ஒருங்­கி­ணைப்பு அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்த அதி­கா­ரி­கள் அந்­தந்த மாநி­லங்­களில் உள்ள மாவட்ட நிர்­வா­கங்­க­ளு­டன் கலந்து பேசி, தமி­ழ­கத்­தில் இருந்து பிற மாநி­லங்­க­ளுக்­கும், அங்­கி­ருக்­கும் தமி­ழர்­களை அழைத்து வர­வும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வார்­கள் என்று அர­சுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் கொரோனா கிரும்தி தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 3,550ஆக அதி­க­ரித்­துள்­ளது. இது­வரை 31 பேர் பலி­யாகி உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்­பில் இருந்து இது­வரை 1,409 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,724ஆக உள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் பாதிப்பு அதிகம்.

அரியலூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களும் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்புக்கு மாறுகின்றன. இப்பகுதிகளில் புதிதாக சிலருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அரியலூரில் 89 பேர், தென்காசியில் 49 பேர், விழுப்புரத்தில் 135 பேர், கடலூரில் 161 பேர், திண்டுக்கல்லில் 91 பேர் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சிவகாசியில் இன்று முதல் பட்டாசு, தீப்பெட்டி, அச்சக ஆலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு, தீப்பெட்டி, அச்சக ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!