அமைச்சர்: கள்ளச் சாராயத்தை தடுக்கவே மதுக்கடைகளுக்கு அனுமதி

சென்னை:தமி­ழ­கத்­தில் சில நிபந்­த­னை­க­ளின் பேரில் மதுக்­க­டை­க­ளைத் திறக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

7ஆம் தேதி முதல் மதுக்­க­டை­கள் இயங்­கும் என அறி­விப்பு வெளி­யா­கி­யுள்ள நிலை­யில், பல்­வேறு அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் தமி­ழக அர­சின் முடி­வுக்­குக் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக தமி­ழ­கத்­தில் அனைத்து மதுக்­க­டை­களும் மதுக்­கூ­டங்­களும் மது­பான விடு­தி­களும் மூடப்­பட்­டுள்­ளன.

கடந்த மார்ச் 24ஆம் தேதி­யி­லி­ருந்து மதுக்­க­டை­கள் மூடப்­பட்­டி­ருப்­ப­தால் மதுப்­பி­ரி­யர்­கள் பெரும் தவிப்­புக்கு ஆளா­கி­னர்.

40 நாட்­க­ளாக மதுக்­க­டைகள் மூடப்­பட்­டி­ருப்­ப­தால் தமி­ழக அர­சுக்கு ஒவ்­வொரு நாளும் கிடைத்­து­வந்த 90 முதல் 100 கோடி ரூபாய் வரு­மா­னம் தடை­பட்­டது. இது­வரை 4 ஆயி­ரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டி­ருக்­க­லாம் எனக் கரு­தப்­ப­டு­கிறது. எனவே மதுக்­க­டை­க­ளைத் திறக்க வேண்­டு­மென ஒரு­த­ரப்­பி­னர் வலி­யு­றுத்தி வந்­த­னர்.

இந்­நி­லை­யில் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்ள நிலை­யில் 7ஆம் தேதி முதல் மது­பா­னக் கடை­க­ளைத் திறக்க தமி­ழக அரசு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

எனி­னும் கிரு­மித்­தொற்று அதி­க­முள்ள சிவப்பு மண்­ட­லப் பகு­தி­களில் இயங்­கும் மதுக்­க­டை­கள் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருக்­கும் என்­றும் மது­பா­னக் கடை­களில் மது வாங்க வரு­வோர் சமூக இடை­வெ­ளியை கடை­பி­டிப்­பது, முகக்­க­வ­சம் அணி­வது உள்­ளிட்ட அர­சின் அறி­வு­றுத்­தல்­க­ளைப் பின்­பற்ற வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்­டுமே மதுக்­க­டை­கள் திறந்­தி­ருக்­கும் என­வும் அரசு அறி­வித்­துள்­ளது. இந்­நி­லை­யில் கள்­ளச்­சா­ரா­யத்தை ஒழிக்­க­வும், பொது­மக்­கள் வெளி­மா­நி­லங்­க­ளுக்­குச் சென்று மது வாங்கி வரு­வ­தைத் தடுக்­க­வும்­தான் மதுக்­க­டை­க­ளைத் திறக்க அரசு முடிவு செய்­துள்­ள­தாக அமைச்­சர் செல்­லூர் ராஜு தெரி­வித்­துள்­ளார்.

‘கிருமித்தொற்றை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கை’

சென்னை: ஊர­டங்கு வேளை­யில் மீண்­டும் மக்­கள் கூட்­ட­மாக கூடு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கு­வது கிரு­மித்­தொற்றை அதி­க­ரிக்­கச் செய்­யும் என திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

ஆளு­மை­யும் அக்­க­றை­யும் உள்ள எந்த ஒரு அர­சும் இப்­ப­டிப்­பட்ட அபா­ய­க­ர­மான நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளாது என அவர் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மதுக்­க­டை­க­ளைத் திறக்­கும் முடி­வைக் கைவிட வேண்­டும் என பாம­க­வும் வலி­யு­றுத்தி உள்­ளது.

மது இல்­லா­விட்­டால் வாழவே முடி­யாது என்று வர்­ணிக்­கப்­பட்­ட­வர்­க­ளும்­கூட இந்த ஊர­டங்கு வேளை­யில் மதுவை மறந்­து­விட்டு புதிய மகிழ்ச்­சி­யு­டன் வாழ்ந்து வரு­வ­தாக பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

“இதைப் பயன்­ப­டுத்தி தமி­ழ­கத்தை மது இல்­லாத திசை­யில் பய­ணம் செய்ய வைக்க வேண்­டிய தரு­ணத்­தில் மதுக்­க­டை­களை மீண்­டும் திறந்­தி­ருப்­பது சிறி­தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத முடிவு,” என்று ராம­தாஸ் கூறியுள்ளார்.

அம­முக பொதுச்­செ­ய­லர் டிடிவி தின­க­ரன் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், கொரோனா நோய்த்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை நாள்­தோ­றும் அதி­க­ரித்து வரும் நிலை­யில் மதுக்­க­டை­க­ளைத் திறப்­பது மக்­க­ளின் உயி­ரோடு விளை­யா­டும் செயல் என கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

இம்முடிவை திரும்பப்பெற வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

மதுக்­க­டை­க­ளைத் திறப்­பது, கொரோனா நோய்த்தொற்றை சிவப்­புக் கம்­ப­ளம் விரித்து வர­வேற்­ப­தற்கு ஒப்­பா­னது என்று நாம் தமி­ழர் கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!