சிலருக்கு நோய்த்தொற்று: கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை தற்காலிகமாக மூடல்

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்­ணிக்கை சீராக அதி­க­ரித்து வரும் நிலை­யில் சென்­னை­யில் உள்ள கோயம்­பேடு மொத்த காய்­க­றிச் சந்தை தாற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டது.

இதை­ய­டுத்து அங்­குள்ள கடை­கள் இனி திரு­ம­ழிசை பகு­தி­யில் இயங்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோயம்­பேடு சந்­தை­யில் இயங்­கி­வந்த கடை­களில் பணி­யாற்­றிய பல­ருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்­பது உறு­தி­யாகி உள்­ளது. சந்­தை­யில் பணி­யாற்­றிய பலர் சொந்த ஊருக்­குத் திரும்பி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து அவர்­க­ளுக்கு ஆங்­காங்கே நோய்த்தொற்­றைக் கண்­ட­றிய பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

இவர்­களில் பல­ருக்கு கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்ள நிலை­யில் நோய்த்­தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க கோயம்­பேடு சந்­தையை மூட­வேண்­டும் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்தி வந்­த­னர்.

இந்­நி­லை­யில் 5ஆம் தேதி முதல் கோயம்­பேடு சந்தை தாற்­கா­லி­க­மாக மூடப்­ப­டு­வ­தாக அரசு அறி­வித்­துள்­ளது.

பொது­மக்­க­ளின் பாது­காப்பு கருதி இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அரசு தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து மொத்த காய்­க­றிச் சந்தை திரு­ம­ழிசை பகு­திக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தால் சில்­லறை வியா­பா­ரி­கள் இனி திரு­ம­ழி­சைக்கு வந்து காய்­க­றி­க­ளைப் பெற்­றுச் செல்­லு­மாறு அரசு அறி­வு­றுத்தி உள்­ளது. இதனால் வியாபாரிகள் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!