தயாராகுங்கள்: போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநர்களுக்கு அரசாங்கம் உடனடி கட்டளை

சென்னை: தமிழ்நாட்டில் மே 17ஆம் தேதிக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதற்கு தயாராகும்படியும் போக்குவரத்துக் கழக இயக்குநர்களுக்குத் தமிழக அரசு உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில அரசுக்குச் சொந்தமான பேருந்துகள் பல்வேறு பணிமனைகளில் கடந்த 40 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

பேருந்துகளைப் பராமரிப்பதற்காக உடனடியாக பராமரிப்புப் பணி ஊழியர்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மே 17க்குப் பிறகு தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளையும் இயக்க வேண்டி இருக்கும் என்றும் அதற்கும் கழகங்கள் தயாராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் அரசு பேருந்துகள் செயல்படும். பேருந்துகளில் 50 விழுக்காட்டு பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளியைப் பேருந்துகளில் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் பேருந்தில் கிருமிநாசினி அடித்து சுத்தப்படுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் நடப்பில் இருக்கும்.

பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உடல் வெப்பநிலையைச் சோதித்த பிறகுதான் பணியைத் தொடங்க வேண்டும். அவர்களுக்கும் முகக்கவசம், கைகழுவும் திரவம் எல்லாம் கட்டாயம்.

ஓட்டுநர் இருக்கையைச் சுற்றிலும் மறைப்புத் திரை இருக்க வேண்டும் எனப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!