24 மணி நேரத்தில் 771 பேருக்குத் தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நேரத்தில் அங்கு இதுவரை இல்லாத அளவுக்குக் கிருமித் தொற்று அதிகமாக பரவுகிறது என்று அச்சம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாநிலத்தில் புதன்கிழமை மட்டும் 771 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். சென்னையில் 324 பேரைக் கிருமி தொற்றியது. இதையடுத்து இந்தியாவில் கிருமித்தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த தமிழகம் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1,806 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் கோயம்பேடு சந்தையும் கிருமிப் பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் புதன்கிழமை உயிரிழந்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரையில் 3,320 ஆண்களும் 1,507 பெண்களும் இரண்டு திருநங்கைகளும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.

புதன்கிழமை மட்டும் 12 வயதுக்குட்பட்ட 41 சிறார்களுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 35 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

அவர்களில் 22 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். பல மருத்துவமனைகளிலும் மொத்தம் 3,275 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1,516 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இதைத் தவிர 3,381 பேர் பல மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 52 கொரோனா கிருமி பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. இதுவரை 188,241 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

அவற்றில் 182,541 மாதிரிகளில் கொரோனா கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 9,769 மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக அமைச்சு தெரிவித்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!